இராஜகிரியில் நடைபெற்ற முப்பெரும் விழா..!!!

சிறந்த அதிகாரிக்கு உதாரணமாக திகழ்ந்து சிறப்பாக செயல்படுபவர் இராஜகிரி மன்னை சேர்ந்த ஷாகுல் ஹமீது. இராஜகிரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மலேசியா மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் நலதிட்டங்கள் வழங்கி, மலேசியா மனிதவள தலைமை செயல் அதிகாரியை பாராட்டினார். தஞ்சாவூர் அருகேயுள்ள இராஜகிரியில் இஸ்லாமிய நல சங்கம் சார்பில் மலேசியா அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் பாராட்டு விழா, இராஜகிரி சமூக மேம்பாட்டு அறக்கட்டளை துவக்க விழா, நலதிட்டமும் மாணாக்கருக்கு ஊக்க பரிசும் வழங்கும் விழா […]

Continue Reading

” தஞ்சையில் ஓர் இனிய மாலை பொழுது ” நிகழ்ச்சியில் மலேசியா அமைச்சர் பங்கேற்பு..!!!

தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்தால் மட்டுமே வேலையிழப்புகள் மற்றும் தொழில் புரட்சி பாதிப்புகளை எதிர்கொண்டு பொருளாதாரத்தில் முன்னிற்க முடியும். தஞ்சையில் நடைபெற்ற தொழில் முறை சந்திப்பு மற்றும் அமைச்சருடனான ஒரு இனிய மாலை பொழுது நிகழ்ச்சியில் மலேசியா மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் வேண்டுகோள். தமிழக சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக, தஞ்சையில், தொழில்முறை சந்திப்பு மற்றும் மலேசியா நாட்டில் உள்ள தொழில் வாய்ப்புகள் பற்றிய கலந்துரையாடலை மையமாக கொண்டு நடத்தபட்ட ” மலேசியா மனிதவள மேம்பாட்டு […]

Continue Reading

நாளை முதல் கடலுக்கு செல்லும் மீனவர்கள்

தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மீனவர்கள் ஆழ்க்கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். மத்திய அரசு மீன்வளம் பாதுகாப்பு, மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலான 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருப்பது வழக்கம். இந்த நிலையில் இன்றுடன் மீன்பிடி தடை காலம் […]

Continue Reading

தமிழகத்தை மீண்டும் மிரட்டும் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில இடங்களில் மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஓமிக்ரான் BA5 கொரோனா காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஜூன் 13ஆம் தேதி […]

Continue Reading

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் டி.ராஜேந்தர்..!!!

மருத்துவ மேல் சிகிச்சைக்காக நடிகர் டி.ராஜேந்தர் அமெரிக்காவுக்கு சென்றார். சில நாட்களுக்கு முன் நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இதயத்துக்கு செல்லக் கூடிய ரத்த குழாய், வால்வுகளில் அடைப்பு இருப்பதாக கண்டறிந்தனர். மேலும் வயிற்றுப் பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டும் வந்தது. தொடர்நது அவர் தீவிர சிசிச்சை பிரிவில் இருந்தார். இது குறித்து நடிகர் சிம்பு கூறும்போது, […]

Continue Reading

அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய வாய்ப்பில்லை- டி.டி.வி.

அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஓராண்டு தி.மு.க. ஆட்சி என்பது மக்களுக்கு கிடைத்த தண்டனை. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் ஆனவுடன் மு.க.ஸ்டாலின் மறந்து விட்டார். குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் தருவேன் என்றார். அதை மறந்து விட்டார். சொத்து வரியை உயர்த்த மாட்டேன் என்று கூறினார். பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு […]

Continue Reading

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு உட்பட 5 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. சமீப காலமாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து 2 வருடங்களுக்கு பிறகு அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கொரோனா பரவலை கட்டுப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கக் கோரி தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் […]

Continue Reading

தமிழகத்தில் பரவுகிறதா குரங்கு அம்மை நோய்

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு முழுவதும் இல்லாத நிலை உள்ளது. அண்ணா பல்கலை.யில் 23 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு லேசான அறிகுறி தான் உள்ளது. கல்வி நிறுவனங்களில் கொரோனா பாதிப்பு முழுவதும் குறைந்து வருகிறது. தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இதுவரை இல்லை. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க தீவிர […]

Continue Reading

MS தோனியின் சர்ப்ரைஸ் விசிட்

சென்னையில் தனது மாற்றுத் திறனாளி ரசிகையை தோனி அவரது இல்லம் தேடி சென்று சந்தித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லாவண்யா என்ற அந்த ரசிகை, தோனியின் ஓவியத்தை வழங்கினார். இதனை பார்த்த தோனி அவருக்கு கைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லாவண்யா, என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் இது என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தோனியை பார்த்ததை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. அவர் மிகவும் எளிமையாகவும், பழுகுவதற்கு இனிமையான […]

Continue Reading

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த கடிதத்தில், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 100-ஐ எட்டியுள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்களில், குறிப்பாக வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், தனிமனித இடைவெளி, […]

Continue Reading