நாளை முதல் கடலுக்கு செல்லும் மீனவர்கள்

தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மீனவர்கள் ஆழ்க்கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். மத்திய அரசு மீன்வளம் பாதுகாப்பு, மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலான 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருப்பது வழக்கம். இந்த நிலையில் இன்றுடன் மீன்பிடி தடை காலம் […]

Continue Reading

தமிழகத்தை மீண்டும் மிரட்டும் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில இடங்களில் மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஓமிக்ரான் BA5 கொரோனா காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஜூன் 13ஆம் தேதி […]

Continue Reading

MS தோனியின் சர்ப்ரைஸ் விசிட்

சென்னையில் தனது மாற்றுத் திறனாளி ரசிகையை தோனி அவரது இல்லம் தேடி சென்று சந்தித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லாவண்யா என்ற அந்த ரசிகை, தோனியின் ஓவியத்தை வழங்கினார். இதனை பார்த்த தோனி அவருக்கு கைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லாவண்யா, என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் இது என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தோனியை பார்த்ததை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. அவர் மிகவும் எளிமையாகவும், பழுகுவதற்கு இனிமையான […]

Continue Reading

தமிழகத்திற்கு கனமழை அலர்ட்

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ல செய்திக்குறிப்பில், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு […]

Continue Reading

புதிய கல்வி கொள்கை ஏன் தவிர்க்கப்படுகிறது – ஆளுநர்

புதிய கல்வி கொள்கை தொலைநோக்கு, மாற்றத்திற்கான கல்வியை நோக்கமாக கொண்டது என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழத்தின் 13-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்த கொண்ட தமிழக கவர்னர் ஆர்.என் ரவி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். அதை தொடர்ந்து பேசிய அவர் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு வலியுறுத்தி உள்ளார். இது குறித்து மேலும் பேசிய கவர்னர் ஆர்.என். ரவி கூறுகையில், ” மற்றவர்கள் […]

Continue Reading

அரசுப்பள்ளிகளில் ஜூன் 13ல் தொடங்கும் !!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை, வரும் ஜூன் 13ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும், கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. அதன்படி, 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் […]

Continue Reading

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவரை 93.24 சதவீதத்தினர் முதல் தவணை […]

Continue Reading

தமிழக அரசு அரசிதழ் வெளியீடு

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கவும், அந்த பொருட்களால் உடலுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்ததாலும், புகையிலை பொருட்களுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு தடை விதித்து வருகிறது. இந்த தடை கடந்த மே 23-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த தடையை மேலும் ஒராண்டுக்கு நீடித்து தமிழக அரசு […]

Continue Reading

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை..!

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர், திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், தருமபுரி, சேலம், திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 16 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை தொடரும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருப்பத்தூர், வேலூர் உள்பட 10 மாவட்டங்களில் இன்று […]

Continue Reading

சென்னை விமானநிலையத்தில் வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னையிலிருந்து துபாய், தாய்லாந்து நாடுகளுக்கு விமானங்களில் கடத்தமுயன்ற ரூ.50.71 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை,திருச்சியை சோ்ந்த 5 பயணிகளை கைது செய்தனா். விசாரணையில் இது ஹவாலா பணம் என்று தெரியவந்தது. சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு பெருமளவு கணக்கில் இல்லாத ஹவாலா பணம் விமானம் கடத்தப் படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள் சென்னை சர்வதேச […]

Continue Reading