இலங்கை அதிபர் மாளிகைக்கு எதிராக உள்ள காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் அறிவிப்பு

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள், ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளில் இருந்து விலகக்கோரி போராட்டம் நடந்தது. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். ஆனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்தார். இதையடுத்து அதிபர் மாளிகைக்கு எதிராக காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அங்கேயே கூடாரங்களை அமைத்து தங்கினர். இதற்கிடையே இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். புதிய அதிபராக […]

Continue Reading

சீன கப்பல் : இந்தியாவின் எதிர்ப்புக்கு பணிந்த இலங்கை

இந்தியாவின் மிக கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து சீனாவின் உளவு கப்பலுக்கான அனுமதியை ரத்து செய்யும் கடிதத்தை இலங்கை அனுப்பி உள்ளது. சீனாவுக்குச் சொந்தமான யுவான் வாங் என்ற கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர உள்ளதாகக் கூறப்பட்டது. சீனா இதனை ஆய்வு கப்பல் என்று கூறினாலும், இந்த கப்பலால் ஏவுகணை செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியும். கொழும்பில் இருந்து கொண்டு இந்தியாவைச் சீனா கண்காணிக்க முயல்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக இந்தியாவும் இலங்கையிடம் தனது அதிருப்திகளை வெளிப்படுத்தியது. […]

Continue Reading

இலங்கையின் புதிய அதிபர் யார்? மும்முனைப் போட்டி

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. மேலும் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால் மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியதால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டார். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்து வந்த நிலையில் அவருக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டம் […]

Continue Reading

கடும் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!!

பாகிஸ்தானைத் தொடர்ந்து மற்றொரு அண்டை நாடான இலங்கையில் கடும் நெருக்கடிக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக குறைத்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை அரசியலில் இருந்து ராஜபக்சே குடும்பமே ஒழித்துக்கட்டப்பட்டுவிட்ட நிலையில், இலங்கையில் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், டீசல் மற்றும் பெட்ரோல் சில்லறை விலைகளை அந்நாட்டு மதிப்பில் தலா ரூ. 20 குறைத்துள்ளது. கடந்த பிப்ரவரி முதல் 5 முறை விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் […]

Continue Reading

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம்

இலங்கையின் தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். இலங்கையில் சுதந்திரத்துக்குப் பிறகு ஏற்பட்டிருக்கிற வரலாறு காணாத விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். பொங்கி எழுந்த பொதுமக்கள் லட்சக்கணக்கில் ஒன்று திரண்டு கடந்த சனிக்கிழமை கொழும்பில் இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். அங்கிருந்த பொருள்களையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். இதையடுத்து இன்று அதிகாலை இலங்கையின் ராணுவ விமானமான அன்டோனோவ்-32 என்ற விமானத்தில் இருந்து அண்டை […]

Continue Reading

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா

இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் அதிகாரப்பூர்வ முறையில் அறிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, கடந்த 3 மாதமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் கொழும்புவில் நேற்று முன்தினம் மக்கள் போராட்டம் உச்சகட்டமாக வெடித்து, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையில் நுழைந்தனர். இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே உயிருக்கு பயந்து தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா […]

Continue Reading

கோத்தபய ராஜபக்சே தப்பியோட்டம்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடியதாக இலங்கை ராணுவம் தகவல் கொழும்பில் உள்ள அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்த நிலையில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச தப்பியோடியுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டாபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம்.

Continue Reading

கொழும்பில் பொதுமக்கள் போராட்டம்..!!!

இலங்கையின் ஹட்டன்-கொழும்பு பிரதான தெருவில் எரிபொருள் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியை மறித்து போராட்டமொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் அப்பகுதியிலுள்ள எரிபொருள் நிலையமொன்றும் மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக இலங்கை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச […]

Continue Reading

இந்தியாவின் உதவி ‘நன்கொடை அல்ல’ – இலங்கை..!!!

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற 1948-க்குப் பிறகு மிக மோசமான அளவுக்கு அந்நாட்டின் பொருளாதாரம் சென்றது. அன்னிய செலாவணி நெருக்கடியால் இறக்குமதி செய்யவும் போதிய பணம் இன்றி இலங்கை தவித்து வருகிறது. இதனால், உணவுப் பொருட்கள், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது. இதன்படி, உணவுபொருட்கள், மருந்துகள், எரிபொருள் போன்றவற்றை இலங்கை இந்தியாவிடம் கடனாக பெற்ற தொகை […]

Continue Reading

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கைக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணயநிதியம் ஆய்வுகளை தொடங்க உள்ளது. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசலை வாங்க பொதுமக்கள் 2, 3 நாட்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுபோக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பள்ளிகள் மற்றும் சில அரசு அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஒரு […]

Continue Reading