சென்னையில் முக்கிய சாலையில் பயங்கர விபத்து

சென்னை கத்திப்பாரா அருகே ஆலந்தூர் ரயில் நிலையம் அருகே வழிகாட்டி பலகை மீது திடீரென பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், ஸ்கூட்டரில் சென்ற ஒருவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் ஏற்பட்டுள்ள விபத்தால் அப்பகுதியில் சென்று வரும் வாகன ஓட்டிகள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இது தொடர்பாக மாநகர பேருந்து ஓட்டுநர் ரகுநாத் கைது செய்யப்பட்டார். அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் […]

Continue Reading

சீன கப்பல் : இந்தியாவின் எதிர்ப்புக்கு பணிந்த இலங்கை

இந்தியாவின் மிக கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து சீனாவின் உளவு கப்பலுக்கான அனுமதியை ரத்து செய்யும் கடிதத்தை இலங்கை அனுப்பி உள்ளது. சீனாவுக்குச் சொந்தமான யுவான் வாங் என்ற கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர உள்ளதாகக் கூறப்பட்டது. சீனா இதனை ஆய்வு கப்பல் என்று கூறினாலும், இந்த கப்பலால் ஏவுகணை செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியும். கொழும்பில் இருந்து கொண்டு இந்தியாவைச் சீனா கண்காணிக்க முயல்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக இந்தியாவும் இலங்கையிடம் தனது அதிருப்திகளை வெளிப்படுத்தியது. […]

Continue Reading

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவைப் போல் நிறைவு விழாவையும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றிபெறும் வீரர்களுக்கு பதக்கம் வழங்கப் போவது யார் என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்குவார் என்று தகவல் […]

Continue Reading

சென்னையில் மழை – ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

சென்னையில் நேற்றிரவு முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் அதிகாலை வரையில் சாரல் மழை பெய்தது. குறிப்பாக தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராய நகர், கிண்டி போன்ற பகுதிகளிலும் சாரல் மழை […]

Continue Reading

சட்னியா சாப்பிட முடியும் ? – திமுக எம்பி கனிமொழி கேள்வி

நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு தொடர்பாக பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சாமானியர்கள் குழந்தைகளுக்கு உணவு அளிக்க திண்டாடும் நிலை உள்ளதாகவும், 3 வேளையும் சட்னி அரைத்து சாப்பிட முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்களவையில் தி.மு.க. எம்.பி.கனிமொழி பேசினார். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்களவையில் தி.மு.க. எம்.பி.கனிமொழி பேசினார். அப்போது ஒன்றிய அமைச்சர் பேசுகையில், தக்காளி, வெங்காயத்தின் […]

Continue Reading

துப்பாக்கி சுடும் போட்டி – பதக்கங்களை குவித்த அஜித்

துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமாரின் அணி தங்கம், வெண்கலம் என பதக்கங்களை குவித்துள்ளது. திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 25 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்று வருகிறார்கள். இதில் […]

Continue Reading

சென்னைக்கு வந்ததை மறக்க முடியாது – பிரதமர் மோடி நெகிழ்ச்சி

”சென்னையின் நினைவுகள், மறக்கமுடியாத பயணத்தை தந்ததற்கு நன்றி” என்ற தலைப்பில் ஒரு நிமிடம் 55 வினாடிகள் ஓடும் வீடியோ காட்சியை மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில், தமிழர்களின் பாரம்பரியமான கதர் வேட்டி-சட்டை அணிந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கியது, நேப்பியர் பாலம் வழியாக நேரு விளையாட்டு அரங்கத்துக்கு காரில் வந்தது, வழிநெடுக உற்சாக வரவேற்பினால் பூ மழையில் நனைந்தது, செஸ் போட்டியை தொடங்கி வைத்தது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாமல்லபுரம் போன்ற நினைவுச்சின்னத்தை வழங்கியது, […]

Continue Reading

பாஜகவும், திமுகவும் கூட்டணியா – அண்ணாமலையின் பதில்

முதல்வரை பாராட்டினால் உடனே அவரோடு கூட்டணி என்பது கிடையாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த முறை பிரதமர் சென்னை வந்தபோது, தமிழக முதல்-அமைச்சர் பெருந்தன்மையோடு நடந்திருக்க வேண்டும். அரசியல் பேசுகிற இடம் இல்லை என்றும் நான் சொல்லி இருந்தேன். ஆனால் இன்றைக்கு முதல்-அமைச்சரை பாராட்டுகிறேன். ஏனென்றால் இந்தியாவை, நம்முடைய கலாசாரத்தை பெருமைப்படுத்தும்விதமாக தமிழக அரசு இந்த நிகழ்ச்சியை முழுமையாக பயன்படுத்தி இருக்கிறது. எனவே முதல்-அமைச்சருக்கும், தமிழக […]

Continue Reading

உயிரிழந்த கபடி வீரரின் குடும்பத்திற்கு நிதியுதவி

போட்டியின் போது உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் முகஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். கடலூர் அருகே கபடி போட்டி விளையாடிக் கொண்டிருக்கும்போதே வீரர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், “என் காதலியும் கபடி நான் காதலிப்பதும் கபடியைத்தான்” என வைத்துள்ள வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பலரும் அவருக்கு அஞ்சலி […]

Continue Reading

”26 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்”

தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆந்திர – தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, […]

Continue Reading