இன்று இரவு 11 மணிக்குள் செய்திடுங்க.. தவறினால் இரு மடங்கு அபராதம்..!

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் நாளை (1-ம் தேதி) முதல் இரண்டு மடங்கு அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இன்று (30-ம் தேதி) இரவு 11 மணிக்குள் இணைக்காதவர்களுக்கு இந்த அபராதம் செலுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் 12 இலக்க ஆதார் எண் > 10 இலக்க பான் எண் > ஆகியவற்றை டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் […]

Continue Reading

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் தனிப்படை விசாரணை..!!!

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-இல் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக,முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில்,கேரளாவைச் சேர்ந்த சயான்,வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர். இவர்கள் இப்போது ஜாமீனில் உள்ளனர்.அதே சமயம்,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கொடநாடு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்படை போலீசார் நடத்தி வரும் மேல் விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கில் விசாரணை நடத்தக் கோவை மேற்கு […]

Continue Reading

G7 சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி இன்று ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்கிறார்

ஜி-7 அமைப்பின் மாநாடு ஜெர்மனியில் உள்ள ஸ்கிளாஸ் எல்மாவ் நகரில் நடந்து வருகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். மாநாட்டில் பருவ நிலை, எரி சக்தி, சுகாதாரம் ஆகியவை தொடர்பான அமர்வில் மோடி பங்கேற்று பேசினார். இதற்கிடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ஆகியோரை சந்தித்து பேசினார். இதுகுறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ஜி-7 மாநாட்டில் போரிஸ் ஜான்சன், […]

Continue Reading

” தஞ்சையில் ஓர் இனிய மாலை பொழுது ” நிகழ்ச்சியில் மலேசியா அமைச்சர் பங்கேற்பு..!!!

தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்தால் மட்டுமே வேலையிழப்புகள் மற்றும் தொழில் புரட்சி பாதிப்புகளை எதிர்கொண்டு பொருளாதாரத்தில் முன்னிற்க முடியும். தஞ்சையில் நடைபெற்ற தொழில் முறை சந்திப்பு மற்றும் அமைச்சருடனான ஒரு இனிய மாலை பொழுது நிகழ்ச்சியில் மலேசியா மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் வேண்டுகோள். தமிழக சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக, தஞ்சையில், தொழில்முறை சந்திப்பு மற்றும் மலேசியா நாட்டில் உள்ள தொழில் வாய்ப்புகள் பற்றிய கலந்துரையாடலை மையமாக கொண்டு நடத்தபட்ட ” மலேசியா மனிதவள மேம்பாட்டு […]

Continue Reading

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கைக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணயநிதியம் ஆய்வுகளை தொடங்க உள்ளது. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசலை வாங்க பொதுமக்கள் 2, 3 நாட்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுபோக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பள்ளிகள் மற்றும் சில அரசு அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஒரு […]

Continue Reading

வலுக்கும் ஒற்றைத் தலைமை கோரிக்கை – OPS 2வது நாளாக ஆலோசனை..!!

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் 2வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், மாவட்டச் செயலாளர் அசோக் வருகை தந்துள்ளனர். நேற்றைய அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், இன்று சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை உள்ளிட்ட சென்னையின் முக்கிய இடங்களில், அதிமுகவுக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் […]

Continue Reading

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்த ரஷ்யா..!!

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவூதி அரேபியாவை பின்னுக்குத்தள்ளி ரஷ்யா 2-வது இடத்தை பிடித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த பட்டியலில் இந்தியாவும் சேர வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் இருநாட்டு போர் விவகாரத்தில் நடுநிலை வகிக்கும் இந்தியா போரை கைவிட ரஷ்யாவும், உக்ரைனும் முன்வர வேண்டும் என்று […]

Continue Reading

மீண்டும் லாக் அப் மரணம் – ஈபிஎஸ் கடும் கண்டனம்!!

திமுக ஆட்சியில் லாக் அப் மரணங்கள் தொடர் கதையாகி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இவை குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “மீண்டும் ஒரு லாக்-அப் மரணம், சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் காவல்நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை தருகிறது. இந்த ஆட்சியில் லாக்-அப் மரணங்கள் தொடர்கதையாகி வருவதை […]

Continue Reading

தமிழகத்தில் கந்து வட்டி வேட்டை தீவிரம்..!!!

கடலூர் மாவட்டம் மதுவானமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் 10-வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். இவர் கடலூர் பெரிய நெல்லிக்கொல்லை பகுதியை சேர்ந்த அனிதா என்ற பெண்ணிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இந்த பணத்துக்கு கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததால் காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து கந்து வட்டி கேட்டு மிரட்டிய அனிதா கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தமிழகம் முழுவதும் கந்து […]

Continue Reading

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து- 18 பேர் பலி

பாகிஸ்தானின் மலைப்பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. ஜோப் தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்றுக் கொண்டிருந்தபோது, கில்லா சைஃபுல்லா பகுதிக்கு அருகே மலை உச்சியில் இருந்து சுமார் நூற்றுக்கணக்கான அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வேனில் பயணித்த 18 பயணிகளும் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்ததாக துணை ஆமையர் ஹாபிஸ் முகமது காசிம் தெரிவித்துள்ளார்.

Continue Reading