தமிழக அரசு பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைத்துவிட்டது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மத்திய அரசு வரியை குறைக்கும் முன்பே ஆகஸ்டிலேயே தமிழ்நாடு அரசு பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைத்துவிட்டது என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மக்களவையில் நிர்மலா சீதாராமன் உரை குறித்து அமைச்சர் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் வரி குறைப்பால் மாநில அரசின் வரி ரூ.1.95 பைசா குறைந்துள்ளது என்றார்.

Continue Reading

செஸ் தீமில் அலங்கரிக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம்!

செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில் கலைஞர் நினைவிடம் “செஸ் போர்டு” போல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று மாலை தொடங்குகிறது. பிரம்மாண்ட தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. முதற்கட்டமாக தமிழகத்தின் கலாச்சாரம் ,பண்பாடு, பாரம்பரியத்தை விளக்கும் வகையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலையில், இதையடுத்து போட்டியினை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். […]

Continue Reading

மாநிலங்களவையில் அமளி – 11 எம்பிக்கள் இடைநீக்கம்

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் 11 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. அது முதல், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜிஎஸ்டி வரி விகிதம் உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை எதிர்த்தும் காங்கிரஸ் மக்களவை எம்பிக்கள் 4 பேர் கூட்டத் தொடர் முழுமைக்கும் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும் காங்கிரஸ் , திமுக, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் […]

Continue Reading

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கினை பதிவு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

இந்தியாவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சென்று வாக்களித்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று தொடங்கியது. இத்தேர்தலில் பாஜ கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். எம்பி, எம்எல்ஏக்கள் வாக்குச்சீட்டு முறையில் புதிய ஜனாதிபதி தேர்வு செய்ய […]

Continue Reading

பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம் – அமைச்சர் பொன்முடி

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம் அரசியலைப் புகுத்துவதற்கு கவர்னர் முயற்சி செய்கிறார். பட்டமளிப்பு விழா தொடர்பாக அரசிடம் எதுவும் ஆலோசனை செய்யப்படவில்லை. மதுரை காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அரசை ஆலோசனை செய்யாமல் காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசால் நியமிக்கப்படுவதால் மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக […]

Continue Reading

மக்களின் முகங்கள் எனக்கு சொல்லுகிறது – முதல்வர் ஸ்டாலின்

தன்னை எதிர்த்து கருத்து சொல்லி பிரபலமாக சிலர் நினைப்பதாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூரில் ரூ.581.44 கோடி மதிப்பிலான 99 புதிய பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். அவ்விழாவில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், உங்களுடைய ஆட்சியில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று மக்களின் முகங்கள் எனக்கு சொல்லுகிறது; அகத்தின் அழகு முகத்தில் தெரியும். இந்த முகங்கள் மூலமாக திமுக ஆட்சி மக்களை முன்றேன்றும் ஆட்சியாக அமைந்துள்ளது என்பது தெரிகிறது மக்களுக்கு நன்மை […]

Continue Reading

‘சர்வதேச அளவில் உற்றுநோக்கக் கூடிய மாநிலமாக தமிழகம் மாறப்போகிறது’ – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடப்பது நமக்கு மிகப்பெரிய பெருமையாகும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாநாட்டை தொடங்கி வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் முதல்முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது பெருமையாக உள்ளது. சர்வதேச அளவில் தமிழகம் அனைவராலும் உற்றுநோக்கக்கூடிய மாநிலமாக விளங்கப்போகிறது. மேலும் தமிழ்நாட்டில் அனைவருக்குமான வளர்ச்சியான திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று […]

Continue Reading

ஓய்வில்லை நமக்கு-முதலிடமே இலக்கு: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: தொடர்ச்சியான பணிகள் – தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றால் உங்களில் ஒருவனான எனக்கு இலேசான காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக, இன்று (20-6-2022) ராணிப்பேட்டை மாவட்டத்திலும், நாளை (21-6-2022) திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன், நேற்று (19-6-2022வி.பி.ராமன் அவர்களைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க இயலாத நிலையில், என்னுடைய உரையினை பொதுச் செயலாளர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் […]

Continue Reading

தவறான தகவலுக்கு மன்னிப்பு கேட்ட அண்ணாமலை..!!!!

தி.மு.க. மூத்த தலைவரான ஆற்காடு வீராசாமி முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்த நிலையில் அவர் மறைந்து விட்டதாக நேற்று தகவல் பரவியது. அப்போது நாமக்கல்லில் பொதுக்கூட்ட த்தில் இருந்து பா.ஜனதா தலைவர் அண்ணாமலையும் அதை மக்கள் மத்தியில் தெரிவித்தார். ஆனால் அந்த தகவல் தவறானது. ஆற்காடு வீராசாமி நலமுடன் தான் இருக்கிறார். இது பற்றி அவரது மகன் கலாநிதி வீராசாமி எம்.பி. டுவிட்டரில் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டார். […]

Continue Reading

அண்ணாமலையின் அதிரடி பேச்சு

பாஜக-வை திமுகதான் பிரதான எதிர்க்கட்சியாக உருவாக்கி வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் ஊழல் குறித்து கூறினால் வழக்கு தொடர்வது வழக்கமான விஷயமாக உள்ளது. வழக்குத் தொடர்ந்தால் வாயை அடைத்துவிட முடியும் என்று நினைப்பது தவறான கருத்து. எந்த வழக்கையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் ஊழலை யாரும் மறைக்க முடியாது. ஊழலை மறைக்க முயற்சித்தால், ஊர்ஜிதம் செய்த பின்பு ஊழல் […]

Continue Reading