6-12 வயதினருக்கு நாளை முதல் கோவேக்சின் தடுப்பூசி

நாடு முழுவதும் 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு நாளை முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சிறுவர்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கோவேக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கறது.

Continue Reading

இன்று தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 72 பேர் பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4 வது அலை உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி […]

Continue Reading

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மாநில அரசு

பஞ்சாப் மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பஞ்சாப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா மாநிலங்களை தொடர்ந்து பஞ்சாபிலும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Continue Reading

ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு இனி முகக்கவசம் தேவையில்லை

கொரோனா பரவலுக்குப் பிறகு ரயில்களில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதை மீறுபவர்களுக்கு ₹ 500 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது நோய் பரவல் மிகவும் குறைந்து விட்டது. ஆகவே அனைத்து மாநிலங்களிலும் பொது இடங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு உள்ளன. இதேபோல ரயில்களிலும் பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது சேரும் […]

Continue Reading

இன்று தமிழகத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 25 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. 18,716 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, புதிதாக 25 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,53,188 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 23 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா உயிரிழப்புகள் பதிவாகவில்லை.

Continue Reading

புதிதாக கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது

கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. 12வயதுக்கு மேற்பட்டோர், இளைஞர்களுக்கு கோவோவேக்ஸ் தடுப்பூசியை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.

Continue Reading

மார்ச் 27 முதல் இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி

சர்வதேச விமானச் சேவைகளுக்கான கட்டுப்பாட்டைத் தளர்த்தியுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக சர்வதேச விமான போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, தற்போது மத்திய அரசின் அறிவிப்பின் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சர்வதேச விமான சேவையை நடத்த உத்தரவிட்டுள்ளது.

Continue Reading

இன்று தமிழகத்தில் 1,252 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4.26 மேல் அதிகரித்துள்ளது 5.09 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,252 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 740 பேர் ஆண்கள், 512 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 41 ஆயிரத்து 783 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை […]

Continue Reading

இன்று தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 2,812 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில், சென்னையில் 546 பேரும், கோவையில் 523 பேரும், செங்கல்பட்டில் 238 பேரும், திருப்பூரில் 169 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். கொரோனா தொற்றிலிருந்து மேலும் 11,154 போ் விடுபட்டு இன்று வீடு திரும்பினா். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 33,48,419 -ஆக அதிகரித்தது. மருத்துவமனைகள், வீடுகளில் மருத்துவக் கண்காணிப்பில் 47,643 போ் உள்ளனா். தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி […]

Continue Reading

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் 2-3-2022 வரை நீட்டிப்பு: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாணை எண்.53 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 28-01-2022-ன்படி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று (12-2-2022) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். […]

Continue Reading