தமிழகத்தில் நாளை 50,000 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் 11-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நாளை(நவ.25) நடைபெற உள்ளது. இதில், இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அந்தவகையில் தமிழக அரசு தற்போது வாரத்திற்கு இருமுறை மெகா தடுப்பூசி முகாம் நடத்துகிறது. இதில் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முகாம்களிலேயே தடுப்பூசி செலுத்த மக்களுக்கு வசதியாக உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 11-வது மெகா […]

Continue Reading

5 முதல் 11 வயதினருக்கு பைசர் தடுப்பூசி: அமெரிக்க அரசு அனுமதி

அமெரிக்காவில் 5 முதல் 11 வயதுடைய 2 ஆயிரம் சிறுவர், சிறுமிகளிடம் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவுகளின் மூலம் இந்த தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளதாகவும், ஆபத்தான பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து 5 முதல் 11 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் 2.8 கோடி […]

Continue Reading

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி உள்ளது

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி: சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் மத்தியபிரதேச சுகாதார அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி வருகிறது. கோவை, சேலம், திருப்பூர் 117 மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்களிடம் ஆலோசனை நடைபெற்றது. 17 லட்சம் தடுப்பூசிகள் […]

Continue Reading

தமிழகத்திற்கு 1 கோடி கொரோனா தடுப்பூசி தேவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்

சென்னை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும். தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்துக்கு மிகக்குறைவாகவே தடுப்பூசி ஒதுக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தடுப்பூசிக்கான தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு சரியான […]

Continue Reading

மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும்: பிரதமர் அறிவிப்பு

டெல்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். அவர் பேசியதாவது: உலகில் உள்ள மற்ற நாடுகளைப் போல இந்தியாவும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் கொரோனா மிகப்பெரிய தொற்றுநோய். இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்சிஜன் தேவை உயர்ந்துள்ளது. ஏப்ரல், மே மாதத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிக அளவில் இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரெயில் […]

Continue Reading

18 முதல் 45 வயதுடையவர்களுக்கு தடுப்பூசியை ஏன் இலவசமாக வழங்க கூடாது? – சுப்ரீம் கோர்ட் கேள்வி

டெல்லி 45-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடுவதும் அதற்கு கீழ் உள்ளவர்களுக்கு பணம் செலுத்தும் முறையும் கையாள்வது நியாயமற்றதாக உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் மத்திய அரசை சாடியுள்ளது. மேலும், 18 -44 வயதினருக்கு தடுப்பூசியை ஏன் இலவசமாக போடக்கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ள சுப்ரீம் கோர்ட், தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.35000 கோடியை எந்தெந்த வகைகளில் அரசு செலவு செய்தது? எனவும் கிராமப்புறங்களில் எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்துவது […]

Continue Reading

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குள் மே 25 ஆம் தேதி செவ்வாய்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது . இதில் ஷேக் தாவூத் தெருவில் 300 பேரும், 115 வது வட்டம் சூரப்பா தெரு,பக்கீர் சாகிப் தெருவில் 200 பேரும், 120 வட்டம் பேகம் சாகிப் தெருவில் 250 பேரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். இந்த முகாமில் பங்கேற்ற சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு […]

Continue Reading

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்து இந்தியாவில் உற்பத்தியை தொடங்கியது

டெல்லி இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் மூலம் முழுவீச்சில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதேபோல் மூன்றாவது மருந்தாக ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதற்கட்டமாக இந்த மருந்து இறக்குமதி செய்யப்பட்டு, குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சப்ளை செய்யப்படுகிறது. அதேசமயம் இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்யும் பணிகளும் நடைபெறுகின்றன. இதற்காக இந்தியாவின் பனேசியா பயோடெக் என்ற மருந்து உற்பத்தி நிறுவனம், ரஷியாவின் நேரடி முதலீட்டு நிதியத்துடன் ஒப்பந்தம் […]

Continue Reading

18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி (மே) முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி அறிமுகம் ஆனது. அப்போது […]

Continue Reading

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிட அனுமதி

சென்னை இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முதல்கட்டமாக நாடு முழுவதும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் போன்ற முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, இந்த நிலையில், தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிட அரசு அனுமதி அளித்துள்ளது. 150 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தடுப்பூசி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

Continue Reading