பயிர் காப்பீடுக்கு ரூ.2,057 கோடி நிதி – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

பயிர்க் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,057.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.   பயிர்க் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,057.25 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பயிர்காப்பீடு நிறுவனங்களுக்கு மாநில அரசின் பங்கு தொகையை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.   அதன்படி, 2022-23-ஆம் நிதியாண்டில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையில் மாநில அரசின் பங்காக ரூ.2,057.25 கோடி நிதியை அனுமதித்து ஆணையிட்டுள்ளது. நடப்பாண்டில் எதிர்வரும் சிறப்பு […]

Continue Reading

பின்லேடனுக்குப் பின் அடுத்த பெரிய ஆபரேஷன் – அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு!

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாத அமைப்பு அல் கொய்தா. பல பயங்கரவாத தாக்குதல்கள், சதி செயல்களை இந்த அமைப்பு செய்து வருகிறது. இந்த அமைப்பை நிறுவிய மற்றும் பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டு வந்த ஒசாமா பின் லேடனை அமெரிக்க படையினர் கடந்த 2011ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், இந்த அமைப்பின் தலைவராக இருந்த வந்த அய்மன் அல்-ஜவாஹிரியை அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் சுட்டுக் கொன்றதாக […]

Continue Reading

இவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் – தலைமை தேர்தல் ஆணையம்

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது 2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் புதிதாக வாக்களிக்க தகுதியான நபர்களுக்காக தற்போது வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது தற்போது 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது 17 வயது உடையவர்கள் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் […]

Continue Reading

ஆவின் பொருட்களின் விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி..!!

தமிழ்நாடு ஆவின் நிறுவனம் பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆவின் நிறுவனம் மூலம் பாலை தவிர மோர், தயிர், வெண்ணெய், நெய், லஸ்ஸி, பனீர், யோகர்ட், பாதாம் பவுடர், உலர் பழ கலவை, ஐஸ் கிரீம்கள், சாக்லெட்கள், குலாப் ஜாமுன்,பால்கோவா, பால் பேடா, மைசூர்பாகு, ரசகுல்லா, […]

Continue Reading

எதிர்க்கட்சி துணைத் தலைவராக R.B.உதயகுமார் நியமனம்..!!!

எதிர்க்கட்சி துணை தலைவராக ஓபிஎஸ் இருந்துவரும் நிலையில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக R.B.உதயகுமார் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக இடைக்காலப் பொதுச் செயலாளர் ஈபிஎஸ் அறிவித்துள்ளார். ஏற்கனவே எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த நிலையில், அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து பொருளாளர் பதவியும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் தொடர்பான பரிந்துரையை சட்டப்பேரவை தலைவருக்கு அதிமுக […]

Continue Reading

பூமியை இன்று வீரியம் மிக்க சூரிய புயல் தாக்க வாய்ப்பு :நாடு முழுவதும் இணைய சேவை முடங்கும் அபாயம்!!

பூமியை இன்று வீரியம் மிக்க சூரிய புயல் தாக்க வாய்ப்பு உள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட கரும்புள்ளி சூரிய புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் பாம்பு வடிவத்தில் நெளிந்த நிலையில், பூமியை நேரடியாக தாக்க வாய்ப்பு உள்ளதாக டாக்டர் தமிதா ஸ்கோவ் என்ற இயற்பியலாளர் கணித்துள்ளார். சூரிய புயல் தாக்கினால் தகவல் தொடர்பு முற்றிலும் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. செயற்கை கோள் மற்றும் தொலைபேசி இடையேயான ஜிபிஎஸ் எனப்படும் […]

Continue Reading

பதிவுத்துறையில் 100 நாளில் ரூ.4,988 வருவாய் – தமிழக அரசு!

ஏப்ரல் 1 முதல் ஜூலை 12 வரை 100 நாளில் ரூ.4,988 கோடி வருவாய் ஈட்டி தமிழ்நாடு பதிவுத்துறை சாதனை படைத்திருக்கிறது. வணிகவரி துறை தமிழக அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் துறை பதிவுத்துறை. அரசின் வளர்ச்சி மற்றும் நல திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை, அரசு வரி விதிப்பு கொள்கை மூலம் வருவாயை பெருக்கி, உயர்த்தப்படும் வரியால் பொதுமக்கள் பாதிப்படையாமல் இருக்க வழிவகை செய்யும். பத்திரப்பதிவு துறை 138 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவை செய்வதுடன் அரசு […]

Continue Reading

ஆந்திராவில் 3 கி.மீ தூரத்திற்கு பூமிக்கு அடியில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு

ஆந்திர மாநிலம் கோண சீமா பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோதாவரி ஆற்றில் வரலாறு காணாத அளவு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோதாவரி நதி அருகே உள்ள ஐ போல வரம் வி கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோபால் ராஜ். இவரது வீட்டின் அருகில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூமிக்கு அடியிலிருந்து திடீரென புகை வந்தது. இதனைக் கண்ட கிராம மக்கள் ஆச்சரியமடைந்து அந்த பகுதியில் பள்ளம் தோண்டியபோது பள்ளத்திலிருந்து […]

Continue Reading

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் 20 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம்

அந்தமான் நிகோபர் தீவில் இன்று காலை 5.57 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 5.57 மணியளவில் போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருந்து 215 கிமீ ESE தொலைவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. வளைகுடாவில் இருந்து 44 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அதிகாலை […]

Continue Reading

அங்கன்வாடி மையங்களில் LKG,UKG சேர்க்கைக்கு ஆணை – தமிழக அரசு உத்தரவு!!

தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர் சேர்க்கை நடத்த தொடக்கக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2381 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் அதற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்படாமலேயே இருந்தது. இதனால் பெற்றோர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாக ஜூன் மாதத் தொடக்கத்தில் தமிழக அரசின் தொடக்கக்கல்வித் துறை அறிவித்தது. […]

Continue Reading