அதிமுக கோட்டையை கைப்பற்றியிருக்கிறோம்: மு.க.ஸ்டாலின்

அதிமுக கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தை கைப்பற்றியிருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். இந்த வெற்றிக்கு காரணம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான். தேர்தலுக்காக இல்லாமல் கொள்கைக்காக கூட்டணி அமைத்தோம். மக்களை எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக உள்ளேன் என கூறினார்.

Continue Reading

கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, அண்ணா நினைவிடத்தில் கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றன. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பெரும்பான்மையான பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, மெரினாவில் அமைந்திருக்கும் கருணாநிதி, […]

Continue Reading

நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாக உள்ளது: மா.சுப்பிரமணியன்

நீட் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 13 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு 13 கட்சிகளின் பிரதி நிதிகளும் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த தேசிய மருத்துவ ஆணைய சட்டம் நமது மாணவர்களை பெருமளவு பாதித்துள்ளது. மத்திய அரசு மாநில அரசு மீது திணித்துள்ள நீட் தேர்வு மாநில சுயாட்சிக்கு எதிரானது. பள்ளி கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக்கும் இந்த நீட் தேர்வு […]

Continue Reading

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரை பறித்துள்ளது என்றும் பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

Continue Reading

தமிழகத்தில் அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை நீட்டிப்பு: முதல்வர்

தமிழகத்தில் திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். முக்கிய அம்சங்கள்: பொதுமக்கள் நலன் கருதி, அதிகப்படியான பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், அரசியல், சமூகம் சார்ந்த மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தற்போது உள்ள தடை அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி வளாகங்களில் அனைத்து நோய்பரவல் தடுப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு உள்ளாட்சி பொறுப்பாளர்கள், மருத்துவத் […]

Continue Reading

இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணம்: நேரில் வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இளம் கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்-லில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகனுமான ரோகித்தை, ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மணமகள் மற்றும் மணமகனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான […]

Continue Reading

இந்தியாவில் முதல் முறையாக ஏலத்தில் வெளியாகும் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை!

இசையமைப்பாளர் ஜிப்ரான், தமிழ் சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்தியிருக்கும் மிக முக்கியமான இசையமைப்பாளர். பல்வேறு புதுவித இசைமுயற்சிகளால், ரசிகர்களிடம் பெரும் புகழை குவித்துள்ளார். அவரது பாடல்கள் மட்டுமல்லாமல் அவரது பின்னணி இசையும் பரவலாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. “சாஹோ” படத்தின் இசையால் இந்திய அளவில் கவனம் குவித்த அவர், தற்போது அப்படத்தில் இருந்து வெளிவராத ஒரு பின்னணி இசை தொகுப்பினை, இதுவரையிலும் இல்லாத வகையில் NFT Non Fungible Token எனும் முறையில் ஏலத்தில் வெளியிடவுள்ளார். […]

Continue Reading

ரேஷன் கடைகளில் 13 வகை மளிகை பொருட்கள் , 2ஆம் தவணை நிவாரண நிதி: முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

சென்னை தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் கொரோனா நிவாரணமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2ம் கட்டமாக மேலும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், மக்களின் சிரமங்களை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் 13 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். கோதுமை, ரவை, சர்க்கரை, உப்பு, புளி, […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

சென்னை தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. அதேநேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. தேர்தலில் பண வினியோகத்தைக் கட்டுப்படுத்த பறக்கும் படையினர் வீதி வீதியாக சோதனை நடத்தி வரும் நிலையில், வருமான வரித்துறையினரும் தங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த […]

Continue Reading

வெற்றிநடை போடும் தமிழகம் என்று சொன்னாலே ஸ்டாலின் அலறுகிறார் – எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

சென்னை ராயபுரம் கல்மண்டபம் சாலையில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்தும் திரு.வி.க. நகர் தொகுதி த.மா.கா. வேட்பாளர் கல்யாணியை ஆதரித்தும் முதலமைச்சர் பழனிசாமி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:- “செழிப்பாக, அமைதியாக தமிழகம் இருக்க வேண்டும் என்றால், தமிழகத்தில் அதிமுக அரசு மீண்டும் வரவேண்டும். இந்தியாவிலேயே அமைதி பூங்காவாக இருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழகம்தான். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்போம். 2ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 62 ஆயிரம் கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. […]

Continue Reading