போதை பொருள் விற்றால் கடும் நடவடிக்கை எடுங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

எல்லாவற்றிலும் வளரும் தமிழ்நாடு போதை போன்ற எதிர்மறை விஷயங்களில் வளர்ந்து விடக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் போதைப்பொருளை ஒழிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆலோசனையில் ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையில் பேசிய முதல்வர், போதைப் பொருள் ஒழிப்பில் சிறப்பு கவனம் தேவை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது கவலையும், வருத்தமும் அளிக்கிறது. போதைப் பொருள் ஒழிப்பில் […]

Continue Reading

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்- தமிழக அரசு உத்தரவு

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 6 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளராக ஜவஹர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக (சிட்கோ) மேலாண் இயக்குநராக மதுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளராக மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக மங்கத்ராம் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநராக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

Continue Reading

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா மீது வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ. முடிவு

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதிகோரி தமிழக அரசுக்கு சி . பி . ஐ கடிதம் எழுதியுள்ளது . பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. போலீசார் தற்போது விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் குட்கா வியாபாரியான தொழில் அதிபர் மாதவராவ் மற்றும் அரசு அதிகாரிகள் 3 பேர் உள்பட 6 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். அவர்கள் 6 பேர் மீதும் […]

Continue Reading

ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. முந்தைய ஆட்சியாளர்களால் கடந்த 25-2-2021 அன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சில நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, கடந்த 3-8-2021 அன்று […]

Continue Reading

விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

வளமான தமிழகத்தை உருவாக்க விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.தலைமை செயலகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது.   அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: காவிரி டெல்டா மிகவும் செழிப்பான பகுதி. மிகப்பெரிய வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதி திகழ்கிறது.   காவிரி நீரை பெற சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் […]

Continue Reading

யார் யாருக்கு கொரோனா பரிசோதனை? – தமிழக அரசு

மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்வோர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளத் தேவையில்லை. வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வருபவர்களில் 2 சதவீதம் பேருக்கு ரேண்டம் முறையில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறி உள்ளோர் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்ட நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்னை உள்ளோர் பரிசோதனை செய்ய வேண்டும். அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கும் […]

Continue Reading

தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் 1000 கோடி ரூபாய் அளவில் ஊழல்: எச் ராஜா

கோவை செல்வ புரம் பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,கடந்த ஆட்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் தொகுப்புடன் 2500 ரொக்க தொகையாக வழங்கியபோது ரூபாய் ஐந்தாயிரம் வழங்கக் கோரிய தற்போதைய முதல்வர் தற்போது வெறும் பொங்கல் தொகுப்பு வழங்கி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசாக இருப்பதாகத் தெரிவித்தார்.மேலும் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்பட்ட மளிகை பொருட்கள் தரமற்றவையாகக் கலப்படமாக இருப்பதாகவும் கூறிய அவர்,பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 1800 கோடி ரூபாயில் 1000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். குடியரசு […]

Continue Reading

வரும் ஜன.17-ஆம் தேதி அரசு விடுமுறை: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஜனவரி 17-ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொங்கல் மற்றும் தைப்பூசத்திற்கு இடைப்பட்ட நாளான ஜனவரி 17-ஆம் தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடுசெய்ய ஜனவரி 29-ஆம் தேதி (4-ம் சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 16-ஆம் தேதியும், தைப்பூசத்திற்காக ஜனவரி 18-ஆம் தேதியும் ஏற்கெனவே விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இடைப்பட்ட நாளான ஜனவரி 17-ஆம் தேதியையும் உள்ளூர் விடுமுறையாக […]

Continue Reading

பொங்கல் சிறப்பு பேருந்துகள் ஜன.11 நாளை முதல் இயக்கம்: தமிழக அரசு

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையிலும் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்ப்டி, பொங்கல் சிறப்பு பேருந்துகள் நாளை(ஜன.11) முதல் வரும் வியாழக்கிழமை(ஜன.13) வரை இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு 10,300 பேருந்துகளும் பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு 6,468 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

Continue Reading

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்துக்கு தமிழக அரசு செய்த மேல்முறையீடு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு குறித்து உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியர் இடஒதுக்கீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்த நிலையில் நாளையே விசாரிக்கப்படும் என பட்டியலிடப்பட்டுள்ளது.

Continue Reading