4 காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் ரத்து.! உறுதிமொழியை அடுத்து சபாநாயகர் அறிவிப்பு.!

இந்தியா முக்கிய செய்திகள்

காங்கிரஸ் கட்சி எம்பி குழு தலைவர் உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து நான்கு எம்பிக்களின் இடைநீக்கம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த வாரம் மக்களவை கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் தொடங்கியது. அப்போது முதல் விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமலியில் ஈடுபட்டனர். இதனால் அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இதில் காங்கிரஸ் எம்பிக்களானா ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகிய தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் உட்பட நான்கு காங்கிரஸ் எம்பிக்கள் அரசுக்கு எதிரான பதாகைகளை கொண்டு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் ஓம் பிரில்லா அவர்கள் நான்கு பேரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி எம்பி குழு தலைவர் உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து இந்த நான்கு எம்பிக்களின் இடைநீக்கம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிரில்லா அறிவித்துள்ளார்.