பிரபல நடிகர் ராமராஜ் அதிர்ச்சி மரணம்

சினிமா முக்கிய செய்திகள்

அவன் இவன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ராமராஜ் காலமானார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

72 வயதான, ராமராஜ் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேல சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்.

கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் சினிமாவுக்கு வந்த ராமராஜ்-க்கு 3 மகன்கள் உள்ளனர்.

கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.