Skip to content
Friday, August 12, 2022
  • About
  • Contact Us
Makkal Kattalai

Makkal Kattalai

Daily தமிழ் நாளிதழ்

  • செய்திகள்
  • ஆல்பம்
  • வீடியோஸ்
  • எம்மைப்பற்றி

‘டுவிட்டர்’ நிறுவனத்திற்கு இறுதி கெடு: சட்டப் பாதுகாப்பை இழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை..!!!

இந்தியா முக்கிய செய்திகள்
June 30, 2022makkaladmin

 இதுவரை பிறப்பித்துள்ள உத்தரவுகளை நிறைவேற்ற, ‘டுவிட்டர்’ சமூக வலை தள நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு, ஜூலை 4ம் தேதி வரை இறுதி கெடு விதித்துள்ளது.

சமூக வலைதளங்கள், இணைய பொழுதுபோக்கு தளங்களை கட்டுப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதி, அரசு அமைப்புகள் ஆட்சேபிக்கும் பதிவுகளை நீக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. இதை நிறைவேற்ற சமூக வலை தளங்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தன. அதன்பிறகு ஏற்றன. ஆனால், டுவிட்டர் நிறுவனம் மட்டும் ஒன்றிய அரசின் பல்வேறு உத்தரவுகளை நிறைவேற்ற

வில்லை. இதையடுத்து, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்ற, ஜூலை 4ம் தேதி வரை கடைசி வாய்ப்பு தருவதாக, டுவிட்டர் நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, பயனாளிகள் பதிவிடும் பதிவுகளுக்கு சமூக வலைதளங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை.

அதே நேரத்தில், அரசின் கட்டுப்பாடுகளை நிறைவேற்றாத நிறுவனங்களுக்கு, இந்த விலக்கு ரத்து செய்யப்படும். இதன்பிறகு, இந்த தளத்தில் வெளியிடப்படும் அனைத்து பதிவுகளுக்கும் நிறுவனமே பொறுப்பாகும். ஆட்சேபகரமான பதிவுகள் இருந்தால், நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on LinkedIn (Opens in new window)
  • Click to share on Pinterest (Opens in new window)
  • Click to share on Skype (Opens in new window)

Related

Tagged central governmentcentralgovtmodiPM Twitter account hackedtwittertwitter account

Post navigation

நாகர்கோவில் காசியின் ஃபோன், லேப்டாப்பில் இத்தனை ஆபாச வீடியோக்களா? – ஷாக்கான நீதிபதி!
கொரோனா பரவல் எதிரொலி- அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Related Posts

முழு அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம்

August 17, 2018August 18, 2018makkaladmin

ஒற்றுமையாக செயல்பட்டு , போரிட்டு வெற்றி காண்போம் : பிரதமர் மோடி

February 28, 2019makkaladmin

மெரினா கடற்கரையை திறப்பது குறித்து 30ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் அரசுக்கு நீதிமன்றம் கெடு

November 18, 2020makkaladmin
image description

Recent Posts

  • திருவல்லிக்கேணி | உதவி ஆணையாளர் சார்லஸ் தலைமையில் போதைப் பொருள்களை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு
  • அதிமுக பொதுச்செயலாளராக மீண்டும் ஒருவரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ் தரப்பு வாதம்
  • இலங்கை அதிபர் மாளிகைக்கு எதிராக உள்ள காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் அறிவிப்பு
  • பீகார் மாநில முதல் மந்திரியாக 8-வது முறையாக மீண்டும் பதவி ஏற்றார் நிதிஷ் குமார்
  • கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு இன்று விசாரணை..!!

Categories

  • World
  • Buy News Portal Pro

Latest News

  • திருவல்லிக்கேணி | உதவி ஆணையாளர் சார்லஸ் தலைமையில் போதைப் பொருள்களை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு

    August 11, 2022makkaladmin
  • அதிமுக பொதுச்செயலாளராக மீண்டும் ஒருவரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ் தரப்பு வாதம்

    August 10, 2022makkaladmin

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
News Portal | Theme: News Portal by Mystery Themes.
  • செய்திகள்
  • ஆல்பம்
  • வீடியோஸ்
  • எம்மைப்பற்றி