இன்று இரவு 11 மணிக்குள் செய்திடுங்க.. தவறினால் இரு மடங்கு அபராதம்..!

இந்தியா முக்கிய செய்திகள்

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் நாளை (1-ம் தேதி) முதல் இரண்டு மடங்கு அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இன்று (30-ம் தேதி) இரவு 11 மணிக்குள் இணைக்காதவர்களுக்கு இந்த அபராதம் செலுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் 12 இலக்க ஆதார் எண் > 10 இலக்க பான் எண் > ஆகியவற்றை டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமாகவும் இந்த இணைப்பை செய்ய முடியும்.

நீங்கள் அனுப்பும் பான் எண், ஆதாருடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டு விட்டால், ‘இந்த பான் நம்பருடன் ஏற்கனவே ஆதார் இணைக்கப்பட்டுள்ளது’ என்று உங்களுக்கு குறுந்தகவல் வரும்.