தாம்பரம் | பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை

தமிழ்நாடு

தாம்பரம் அருகே பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை சிசிடிவி காட்சிகள் பதிவான பெட்டியையும் திருடி சென்றுள்ளனர்

சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரா (38) செங்கல்பட்டு பொதுபணிதுறையில் கூடுதல் கோட்ட பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்,

சந்திரா கடந்த வெள்ளிகிழமை அன்று தனது குடும்பத்துடன் சொந்த ஊரான விருத்தாச்சலம் சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார்,

அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார் பின்பு உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கபட்டது அதில் இருந்த 32 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கபட்டது தெரியவந்தது,

மேலும் வீட்டில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி கேமராக்களை திருப்பி வைத்த கொள்ளையர்கள் காட்சிகள் பதிவான பெட்டியையும் திருடி சென்றுள்ளனர்,

சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் அளிக்கபட்டதை அடுத்து கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார் தடயங்களை சேகரித்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.