கொழும்பில் பொதுமக்கள் போராட்டம்..!!!

உலகம் முக்கிய செய்திகள்

இலங்கையின் ஹட்டன்-கொழும்பு பிரதான தெருவில் எரிபொருள் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியை மறித்து போராட்டமொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் அப்பகுதியிலுள்ள எரிபொருள் நிலையமொன்றும் மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக இலங்கை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச நாடுகளின் நிதியுதவியை எதிர்நோக்கி இலங்கை அரசு காத்திருக்கிறது. இந்தியாவும் பல்வேறு உதவிகளை அளித்து வருகிறது. சமீபத்தில் தமிழக அரசு கூட அரிசி உள்ளிட்ட பொருட்களை இலங்கைமக்களுக்காக தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைத்தது.

கடுமையா பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதை அடுத்து, இலங்கை பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்ச பதவி விலக நேர்ந்தது. இதையடுத்து, அந்நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர்கள் எரிவாயு நிலையங்கள் முன் நீண்ட வரிசையில் காத்திருந்ததும் நினைவுகூரத்தக்கது.