உலக சாம்பியன்ஷிப் நீச்சல் இறுதிப் போட்டியில்: மயங்கிய வீராங்கனை..!!!

உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் நீச்சல் வீராங்கனை அனிதா அல்வாரெஸ்(வயது 25). புடாபெஸ்டில் நடந்த பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டார் . அப்போது அவர் தண்ணீரில் மயங்கிவிட்டார். அவர் சுயநினைவை இழந்தபோது நீச்சல் குளத்தின் நடுப்பகுதியில் இருந்தார்.

மயங்கியதும் குளத்தின் அடிப்பகுதியில் மூழ்கத் தொடங்கினார். உடனடியாக அவரது பயிற்சியாளர் ஆண்ட்ரியா புயெண்டசால் காப்பாற்றப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தற்போது வீராங்கனை குணமடைந்து வருகிறார்.

வீராங்கனை நீச்சல் குளத்தில் வைத்து மயக்கமடைவது முதல் முறையல்ல . கடந்த ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற போட்டியின் போதும் அல்வாரெஸ் குளத்தில் மயங்கி விழுந்தார் அப்போதும் அவரது பயிற்சியாளர் ஆண்ட்ரியாவால் காப்பாற்றப்பட்டார்.