பட்டாசு ஆலை வெடி விபத்து; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

கடலூர் பட்டாசு ஆலை விபத்தில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் எம்.புதூரில் வாண வெடிக்கை பட்டாசு தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில், வெடிகள் வெடித்து சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.