பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு; சற்று நேரத்தில் ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாடு முக்கிய செய்திகள்
சற்று நேரத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான இடைக்கால உத்தரவை பிறப்பிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
 
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க வேண்டும் என ராம்குமார் ஆதித்தன், சுரேன், கேசி பழனிசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும், அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடும் செய்திருந்தார். அதன்படி, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு விசாரணை பிற்பகல் 3 மணி முதல் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் காரசார வாதத்தை முன்வைத்தனர். இதன்பின் மனுதாரர் தரப்பு வாதமும் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் சற்று நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவுள்ளது. கூட்டம் நடத்தலாம், ஆனால், கட்சி விதிகளில் மட்டும் திருத்தம் செய்யக்கூடாது என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில், சற்று நேரத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.