வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை

உலகம் முக்கிய செய்திகள்

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கைக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணயநிதியம் ஆய்வுகளை தொடங்க உள்ளது.

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசலை வாங்க பொதுமக்கள் 2, 3 நாட்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுபோக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பள்ளிகள் மற்றும் சில அரசு அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பள்ளிகள் மூடப்படும் நிலையில், ஆன்லைனில் பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு அருகே இருக்கும் விஸ்வாமாடு என்ற பகுதியில் என்ற பகுதியில், பெட்ரோல் வாங்க வந்தவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தொடரும் தட்டுப்பாட்டால் அந்தநாட்டில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.இலங்கையின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய சர்வதேச நாணய நிதியத்தின் குழு சென்றுள்ளது. 10 நாட்கள் இந்த ஆய்வுபணிகள் நடைப்பெற உள்ளன. இதன் முடிவில் இலங்கைக்கு கடனுதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. எனினும் அந்த நிதி கிடைக்க தாமதமாகும் என்பதால் நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.