ரஜினியுடன் நடிக்க தயார்

சினிமா முக்கிய செய்திகள்

ரஜினியுடன் இணைந்து நடிக்க எப்போதும் தயார் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை பத்திரிகையாளர்களுடன் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியின்போது,

நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய கமல்ஹாசன், சிரத்தை இல்லாமல் எதையும் செய்ய கூடாது என்று நினைப்பவன் நான்.

ரஜினியுடன் இணைந்து எப்போதும் நடிக்க தயாராகவே உள்ளேன். மக்கள் நீதி மையம் என்ற குழந்தை நன்றாக வளர்ந்ததுள்ளது. 5 வயது ஆகிறது” என்றார்.