தமிழகத்தை மீண்டும் மிரட்டும் கொரோனா

கல்வி முக்கிய செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில இடங்களில் மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

ஓமிக்ரான் BA5 கொரோனா காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநிலத்தின் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இப்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளி வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.