கமலின் விக்ரம் படம் எப்படி இருக்கு?

சினிமா முக்கிய செய்திகள்

நீண்ட நாள்களுக்கு பிறகு கமல் ஹாசனை திரையில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது என கமல் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல் ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இன்று வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு பின் கமல் திரைப்படம் வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு விக்ரம் திரைப்பட சிறப்பு காட்சிக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.