அரசுப்பள்ளிகளில் ஜூன் 13ல் தொடங்கும் !!

கல்வி முக்கிய செய்திகள்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை, வரும் ஜூன் 13ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும், கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.

அதன்படி, 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும்,

வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளன.

இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11ம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை வரும் ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

அதேபோல, இடைப்பட்ட வகுப்புகளான 2, 3, 4, 7, 8, 10ம் வகுப்பு ஆகியவற்றுக்கும் ஜூன் 13ஆம் தேதியே மணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்துள்ள நிலையில், அரசுப்பள்ளிகளில் தாமதமாக தொடங்கும் சேர்க்கையால் மாணவர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.