களத்தில் இறங்கும் அன்புமணி ராமதாஸ்

அரசியல் முக்கிய செய்திகள்

பாமக கட்சித் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜிகே மணி இருந்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜி.கே மணியின் பணியை பாராட்டி பாமக சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

பின்னர் கட்சித் தலைவர் பதிவி அன்புமணி ராமதாசுக்கு கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

ஜிகே மணி நிலை என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

25 ஆண்டு காலம் கட்சியில் தலைவராக இருந்த ஜி.கே மணியில் தலைவர் பதவி பறித்து அன்புமணிக்கு வழக்கப்பட உள்ளதா, பாமகவிலும் வாரிசு அரசியல்தானா என்றும் பலரும் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை பொறுப்பேற்க ஒருமனதாக தீர்மானத்தை முன்மொழிகிறேன் என ஜிகே.மணி தெரிவித்தார்.

மேலும் இத்தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அதைத்தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஒருமனதாக தீர்மானத்தை வரவேற்றனர். இந்நிலையில் பாமக தலைவராக அன்புமணி இராமதாஸ் பொறுப்பேற்றது பாமகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.