வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் இன்று கனமழை பெய்யும்.
தேனி, திண்டுக்கல், காரைக்கால், புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.
நாளை (28-ந்தேதி) முதல் 31-ந்தேதி வரை 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டு உள்ளது.