கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது.

இதை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவரை 93.24 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசியும் 82.55 சதவீதத்தினர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

தற்போது தான் இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.