பொதுமக்கள் கடந்த சில நாட்களாக வெயிலால் கடும் அவதியடைந்து வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் நாளையுடன் விடைபெறுகிறது.
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது.
அக்னி நட்சத்திரத்தின் காலகட்டம் மே 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மொத்தம் 25 நாட்கள் ஆகும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் நாளை (28-ந்தேதி) விடைபெறுகிறது.
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்தது.
அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே தமிழகத்தின் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.
இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நாளையுடன் விடைபெறுவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.