பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு

கல்வி முக்கிய செய்திகள்

1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

எந்த மாநிலத்திலும் இல்லா வகையில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாள்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இது தவிர வரும் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகளையும் அமைச்சர் வெளியிட்டார். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ல் தொடங்கப்படும் என்றும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ல் தொ

டங்கும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 3ல் தொடங்கும் என்று கூறி உள்ளார்.