பிரபல பாடகி சங்கீதா உடல்நலக்குறைவால் மறைந்தார்

சினிமா முக்கிய செய்திகள்

பிரபல திரைப்பட பாடகி சங்கீதா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 46.

தமிழில் மிஸ்டர் ரோமியோ, தலைநகரம் என வெகு சில படங்களிலேயே பாடியுள்ள சங்கீதா சஜித் இதுவரை,
200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

அவர் பாடிய கடைசி பாடல், பிருத்விராஜின் குருதி படத்தின் தீம் சாங் ஆகும்.

இதையடுத்து, கடந்த சில மாதங்களாக சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, திருவனந்தபுரத்தில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கி அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில், சங்கீதா சஜித் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவு தென்னிந்திய திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இசைக்கலைஞர்களும் ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.