மாணவர்களுக்கு முக்கிய செய்தி!

கல்வி முக்கிய செய்திகள்

தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை இன்றுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழைக்குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.

இந்த திட்டத்தில் எல்.கே.ஜி. அல்லது 1-ம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள், 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க தவறியவர்கள் http://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுவரை ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20 முதல் மே 24 வரை 1.34 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.