குரங்கு அம்மை நோயை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை

உலகம் முக்கிய செய்திகள்

குரங்கு அம்மை நோயை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரங்கு அம்மை ஆப்பிரிக்க நாடுகளில் பரவக்கூடிய நோய், ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.

நோய் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் குரங்கு அம்மை நோய் தொடர்பான சோதனை நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழக விடுதியை தொடர்ந்து மற்ற விடுதிகளிலும் சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம் என்று கூறினார்.

BA A4 தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மக்கள் கவனக்குறைவாக உள்ளனர். பொது சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் தாங்களாக முன்வந்து பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் சில இடத்தில் கொரோனா கிளஸ்டர் உருவாகிறது.

ஒமைக்ரான் வகையில் பல உட்பிரிவு தொற்று வகை உள்ளதால் அதனால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.