தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறப்பு?

கல்வி முக்கிய செய்திகள்

தமிழகத்தில் கோடைகால விடுமுறைக்கு பிறகு 1முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி நாளை அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வு முடிந்து 14ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு, உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள்,

பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் காரணமாக பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என கூறப்படுகிறது.