அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி முடிவு..!

கல்வி முக்கிய செய்திகள்

தமிழகத்தில், வரும் கல்வி ஆண்டில் இருந்து 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என்ற தகவல் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் பொறியியல் படிப்புகளுக்கான ஆர்வம் குறைந்து வருவதால் மாணவர் சேர்க்கை பெரிய அளவில் குறைந்து வருகிறது.

இதன் காரணமாக தனியார் பொறியியல் கல்லூரிகளில் அதிகளவிலான காலியிடங்கள் நிரப்பப்படாமலேயே இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அங்கீகாரம் பெறுவதற்கு 10 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கவில்லை.

இதனால் வரும் கல்வி ஆண்டு முதல் அந்த 10 தனியார் பொறியியல் கல்லூரிகளும் மூடப்படுகின்றன.