மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா,- புதிய வசதிகளை தொடங்கி வைத்த முதல்வர்

தமிழ்நாடு முக்கிய செய்திகள்
மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பொத்தான்கள் போன்ற புதிய வசதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
 
பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நிர்பயா திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 2,500 பேருந்துகளில் சிசிடிவி, அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இன்று 500 பேருந்துகளில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.