தமிழக கவர்னர் டெல்லிக்கு திடீர் பயணம்..!!!

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

கோவையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37வது பட்டமளிப்பு விழா நேற்று காலையில் நடந்தது. இதில், பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி முன்னிலை வகித்தார். இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். துணைவேந்தர் காளிராஜ் வரவேற்றார்.

விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.  விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி இந்தி திணிப்பு விவகாரம் பற்றி பேசினார்.

அமைச்சரின் பேச்சுக்கு விழா மேடையிலேயே கவர்னர் ஆர்.என். ரவி பதில் அளித்து பேசினார்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  
இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சென்னையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்கிறார்.

வருகிற 16ந்தேதி (நாளை மறுநாள்) சென்னை பல்கலைக்கழக விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கவர்னர் ஆர்.என். ரவி பங்கேற்க உள்ள நிலையில் அவர் இன்று டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.