தீவிரமடையும் அசானி புயல் – யார், யாருக்கு பாதிப்பு?

இந்தியா முக்கிய செய்திகள்

அசானி புயலானது இன்று இரவு வடக்கு ஆந்திர கடலோர பகுதியை நெருங்கி ஒடிசா கடலோரத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காக்கிநாடாவில் இருந்து 210 கி.மீ தொலைவில் நீடிக்கும் அசானி புயலால் ஆந்திர கரையோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தீவிர புயலானது அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக வலுவிழக்கிறது.

இது ஆந்திரா, ஒடிசா கடல் பகுதியிலேயே மையம் கொண்டுள்ளது. இது படிப்படியாக வலுவிழக்கக் கூடும்.

மேலும் மேற்கு மத்திய கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் 2 நாட்களாக மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.