வெளியேறினார் மகிந்த ராஜபக்சே

உலகம் முக்கிய செய்திகள்

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கொழும்பு அரசு மாளிகையை விட்டு வெளியேறினார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி பிரதமராக இருக்கும் ராஜபக்ச சகோதரர்கள் பதவி விலக கோரி மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

இந்த நிலையில் கொழும்பு அரசு மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். ராணுவம் அவர்களை அப்புறப்படுத்தியதை அடுத்து மாளிகையிலிருந்து ராஜபக்சே வெளியேறினார்.

இதேவேளை மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ள மகிந்த வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் செல்லலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

நைஜீரியாவில் இருந்து சிறப்பு விமானம் ஒன்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.