74 உக்ரைன் ராணுவத் தளவாடங்கள் அழிப்பு

உலகம் முக்கிய செய்திகள்

11 விமானப் படை தளங்கள் உள்பட 74 உக்ரைன் ராணுவத் தளவாடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடர் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவுக்குள் நுழைந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதனிடையே, உக்ரைன் ராணுவத் தளவாடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷொய்கு அறிவித்துள்ளார். மேலும் உக்ரைன் ராணுவ வீரர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். விமானியின் தவறு காரணமாகவே எஸ்யு-25 ஜெட் விபத்துக்குள்ளானதாகவும் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.