திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட மாநகராட்சி ஊழியர்கள்

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட மாநகராட்சி ஊழியர்கள்

சென்னை மாநகரின் மையப்பகுதியாக உள்ள சேப்பாக்க சட்டமன்ற தொகுதியின் பிரதான பகுதியானதிருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில், ராகவேந்திர கோயில், பார்த்தசாரதி கோயில் என புனித தளத்திற்குசெல்லும் நுழைவாயில் பகுதியில், அரசின் டாஸ்மாக் கடை உள்ளது.

இந்த டாஸ்மாக் கடையில் மதுவாங்கும் நபர்கள் நெடுஞ்சாலையிலே அமர்ந்து மது அருந்துவதால், டாஸ்மாக்கடையை அடுத்த பேருந்து நிலையத்தில் மகளிர், மாணவர் உட்பட பொதுமக்கள் எண்ணற்ற இன்னல்களைசந்தித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனையும் இந்த இடத்தில் தற்போதுஅதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

கஞ்சாவை புகைத்து விட்டு, சாலையோரங்களில் உறங்குவது, சீறுநீர் கழிப்பது என அநாகரீக செயல்கள்நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் பெரும்அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றனர்.

ஆகவே காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு கஞ்சா விற்பனைக்கு கட்டுபடுத்தவதோடு, போதைஆசாமிகளின் அடாவடித்தனத்தை அடக்கி, பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டுமெனஇப்பகுதி மக்கள் சார்பாக நீண்டநாள் மாநகராட்சி அதிகாரிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஜன.25-ம் தேதி மாநகராட்சி நிர்வாகம் சீரமைப்பு பணிகளைமேற்கொண்டது. மண்டல அதிகாரி அந்தோணி மணிமாறன், யூனிட் ஆபீசர் நிசார், சூப்ரவைசர் தினேஷ்ஆகியோர் மேற்பார்வையில், மாநகராட்சி ஊழியர்கள் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் சுகாதார சீர்கேடுஏற்படுத்தும் வகையில், இருந்த பகுதியில் கழிவுகளை அகற்றி, சிமெண்ட் கலவை கொண்டு சீரமைத்தனர்.

நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த சேப்பாக்கம்திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதிஸ்டாலின் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.