தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் 1000 கோடி ரூபாய் அளவில் ஊழல்: எச் ராஜா

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

கோவை செல்வ புரம் பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,கடந்த ஆட்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் தொகுப்புடன் 2500 ரொக்க தொகையாக வழங்கியபோது ரூபாய் ஐந்தாயிரம் வழங்கக் கோரிய தற்போதைய முதல்வர் தற்போது வெறும் பொங்கல் தொகுப்பு வழங்கி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசாக இருப்பதாகத் தெரிவித்தார்.மேலும் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்பட்ட மளிகை பொருட்கள் தரமற்றவையாகக் கலப்படமாக இருப்பதாகவும் கூறிய அவர்,பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 1800 கோடி ரூபாயில் 1000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

குடியரசு தின விழாவில் தமிழக சிறப்பு ஊர்திகள் புறக்கணிப்பு குறித்த கேள்விக்குத் தமிழக அரசு இதில் நாடகம் ஆடுவதாகவும், கடந்த 2006 மத்தியில் தி.மு.க கூட்டணி அரசு ஆட்சியிலிருந்த போதும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தமிழக சிறப்பு ஊர்திகளுக்கு அனுமதி கிடைத்ததாகவும்,மற்ற சில ஆண்டுகளில் ஏன் அனுமதி கிடைக்கவில்லள எனக் கேள்வி எழுப்பினார்.அரசுக்கும் இதற்கும் தொடர்பில்லை எனக் கூறிய அவர் கடந்தலசில ஆண்டுகளில் பா.ஜ.க.ஆட்சி நடைபெறும் உ.பி.அரசிற்கு வாகன ஊர்தி அனுமதி கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார். வரும் உள்ளாட்சித் தேர்தலில் பொங்கல் தொகுப்பில் மக்களை ஏமாற்றிய தமிழக அரசிற்குத் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்தார். பேட்டியின் போது தமிழக பா.ஜ.க.கலை கலாச்சார பிரிவின் மாநிலச் செயலாளர் பி.வி.சண்முகம்,மாவட்டச் செயலாளர் கார்த்தி, செல்வ புரம் மண்டலச் செயலாளர் ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.