தமிழகத்தில் 29,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் 1,54,912 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 28,561 பேருக்கு தொற்று உறுதியானது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் 1,79,205 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி, இன்று மட்டும் சென்னையில் 7,520 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 3,390 பேரும், செங்கல்பட்டில் 2,196 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மற்றொருபுறம் மேலும் 19,978 போ் கொரோனாவிலிருந்து விடுபட்டு இன்று வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 26,479 -ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 39 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,112-ஆக அதிகரித்துள்ளது.