இன்று தமிழகத்தில் புதிதாக 23,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 23,888 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய சமீபத்திய தரவுகள் வெளியாகியுள்ளன. 1,41,562 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் புதிதாக 23,888 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 15,036 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 29 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,87,254ஆக உயர்ந்துள்ளது. இதில் 27,89,045 பேர் குணமடைந்துவிட்டனர். 37,038 பேர் பலியாகியுள்ளனர்.