பிப்ரவரி 27-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா முக்கிய செய்திகள்

இந்தியாவில் போலியோ வைரஸைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டின் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற ஜனவரி 23-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜனவரி 23-ம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற பிப்ரவரி 27-ம் தேதிக்கு (ஞாயிற்றுக்கிழமை) மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்.27-ம் தேதி நடைபெறும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.