50% ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர வேண்டும்: புதுச்சேரி அரசு உத்தரவு

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி வருகிற ஜனவரி 31 ஆம் தேதி வரை 50% அரசு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குரூப் ‘பி’ மற்றும் குரூப் ‘சி’ பிரிவு ஊழியர்கள் 50% பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என்றும் அரசுச் செயலர்கள், அரசுத்துறையின் தலைவர்கள் முழுமையாக பணிக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் தேவைப்பட்டால் பணிக்கு வரலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதுதவிர அரசுத் துறையின் கூட்டங்கள் அனைத்தும் காணொலி மூலமாக மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.