3 மணி நேரத்திலும் வழிப்பறிக் கொள்ளையர்களைப் பிடித்த சோழபுரம் காவல்துறையினர்

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சோழபுரம் ராமானுஜபுரம் பெரியார் நகரை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராதாகிருஷ்ணன் அதே பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் மகன் கவியரசு ஆகிய இருவரும் சோழபுரத்தில் ஹோட்டல் அடிதடி வழக்கில் சிறையில் இருந்து வந்தவர்கள் வந்தவுடன் அந்த ஹோட்டல் உரிமையாளரின் வீட்டுக்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் பணம் 1/2 பவுன் தங்க நகை 2 செல்போன்கள் ஆகியவைகளை பிடுங்கி சென்றுள்ளனர். தகவல் கிடைத்து விரைந்து சென்ற சோழபுரம் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக திருட மருதூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவரின் உத்தரவின் பேரில் திருப்பனந்தாள் காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார் சோழபுரம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் அமல்தாஸ் தலைமையிலான காவலர்கள் சோழபுரம் மற்றும் விளந்த கண்டம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 39,000/ ரூபாய் பணம் 1/2 தங்க நகை 2 செல்போன்கள் 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கைது சம்பவம் சோழபுரம் பகுதியில் காவல்துறை மீது மிகுந்த மரியாதை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது