வரும் ஜன.17-ஆம் தேதி அரசு விடுமுறை: தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 17-ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொங்கல் மற்றும் தைப்பூசத்திற்கு இடைப்பட்ட நாளான ஜனவரி 17-ஆம் தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடுசெய்ய ஜனவரி 29-ஆம் தேதி (4-ம் சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 16-ஆம் தேதியும், தைப்பூசத்திற்காக ஜனவரி 18-ஆம் தேதியும் ஏற்கெனவே விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இடைப்பட்ட நாளான ஜனவரி 17-ஆம் தேதியையும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க அரசு பணியாளர் சங்கங்களிடமிருந்து கோரிக்கை எழுந்தது. olidayஇதனையடுத்து அவர்களது கோரிக்கையை பரிசீலனை செய்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு ஜனவரி 17-ஆம் தேதி விடுமுறை என அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.