இன்று தமிழகத்தில் புதிதாக 13,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 13,990 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 11 பேர் உயிரிழந்தனர். தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 1,35,266 பரிசோதனைகளில் புதிதாக 13,990 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 11 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,866-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக கொனாவிலிருந்து 2,547 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மொத்தமாக கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 28,14,276-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 6,190 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,844-ஆக அதிகரித்துள்ளது.