நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாக உள்ளது: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

நீட் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

13 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு 13 கட்சிகளின் பிரதி நிதிகளும் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த தேசிய மருத்துவ ஆணைய சட்டம் நமது மாணவர்களை பெருமளவு பாதித்துள்ளது.

மத்திய அரசு மாநில அரசு மீது திணித்துள்ள நீட் தேர்வு
மாநில சுயாட்சிக்கு எதிரானது. பள்ளி கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக்கும் இந்த நீட் தேர்வு கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பதாக உள்ளது.

கடந்த செப் 13 ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்ட முன் வடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. உள்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கோரியும் அவர் நேரம் அளிக்காதது மக்கள் ஆட்சி மாண்புகளுக்கு எதிரானது என சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்து அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.

நீட் தேர்வை முழுமையாக நீக்கிட தமிழக சட்டமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான ஏற்பாடு எம்மாதிரியானது என்பது சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து முடிவு செய்யப்படும்

ஏ கே ராஜன் கமிட்டி அறிக்கையில் தமிழில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு முன்னாள் 17 சதவிகிதம் இருந்தது நீட் தேர்வுக்கு பிறகு 2 விழுகாடாக உள்ளது என என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் நீட் எதிர்ப்புணர்வு இல்லை மற்ற மாநிலங்களிலும் நீட் எதிர்ப்பு நிலை உள்ளது. ஜனநாயக ரீதியாக பா.ஜ.க வின் கருத்து உள்ளது. மீண்டும் ஆளுநரையும் , குடியரசு தலைவரையும் அனைத்து கட்சி பிரமுகர்களும் சந்திக்க வாய்ப்புள்ளது. மக்கள் மனதில் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு கனந்து கொண்டு இருக்கிறது அதனை ஒருங்கிணைக்க வேண்டும்.